தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ
_ மஹா கவி சுப்ரமணிய பாரதி